/உள்ளூர் செய்திகள்/கரூர்/அடிப்படை பணியாளர்கள் தீர்மானம் கடித போக்குவரத்துக்கு சுகாதார பணியாளர்களை அனுப்பக்கூடாதுஅடிப்படை பணியாளர்கள் தீர்மானம் கடித போக்குவரத்துக்கு சுகாதார பணியாளர்களை அனுப்பக்கூடாது
அடிப்படை பணியாளர்கள் தீர்மானம் கடித போக்குவரத்துக்கு சுகாதார பணியாளர்களை அனுப்பக்கூடாது
அடிப்படை பணியாளர்கள் தீர்மானம் கடித போக்குவரத்துக்கு சுகாதார பணியாளர்களை அனுப்பக்கூடாது
அடிப்படை பணியாளர்கள் தீர்மானம் கடித போக்குவரத்துக்கு சுகாதார பணியாளர்களை அனுப்பக்கூடாது
ADDED : ஆக 29, 2011 11:59 PM
கரூர்: கரூர் மாவட்ட பொதுசுகாதார துறை அடிப்படை பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமையில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் மாதந்தோறும் சம்பளத்துக்கு அரசாணை வழங்குதல், துணை இயக்குநர் அலுவலகத்தில் மூன்றாவது மாடியில் உள்ள மருந்து பெட்டிகள் வைக்கும் அறையை கீழ்தளத்துக்கு மாற்றுதல், ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகளுக்கு சீட் கொடுக்க தனி அறை அமைத்தல், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், கல்வி தகுதிகள் அடிப்படையில் சுகாதார பணியாளர்களுக்கு பத வி உயர்வு வழங்குதல், மாலை நேரத்தில் சுகாதார பணியாளர்களை துணை இயக்குநர் அலுவலகத்துக்கு கடிதம் கொண்டு செல்ல அனுப்புவதை கைவிடுதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை தலைவர்கள் ஞானசம்பந்தம், சகுந்தலா, செயலாளர் செல்வன், இணை செயலாளர் ராமசாமி, கந்தசாமி, பொருளாளர் காளியப்பன், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.