/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாற்று திறனாளிகள் தகுதி தேர்வு முகாம்மாற்று திறனாளிகள் தகுதி தேர்வு முகாம்
மாற்று திறனாளிகள் தகுதி தேர்வு முகாம்
மாற்று திறனாளிகள் தகுதி தேர்வு முகாம்
மாற்று திறனாளிகள் தகுதி தேர்வு முகாம்
ADDED : ஆக 26, 2011 12:16 AM
திண்டிவனம் : திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் வயது வரம்பு தளர்வு தேர்வு முகாம் நடந்தது.
முகாமில் திண்டிவனம் தாலுகாவை சேர்ந்த 125 மாற்று திறனாளிகளும், வானூர் தாலுகாவை சேர்ந்த 19 பேர் உள்ளிட்ட 144 பேர் கலந்து கொண்டனர். டாக்டர்கள் ரவிச்சந்திரன், வெங்கடேசன், கணேஷ் ஆகியோர் மாற்று திறனாளிகளை பரிசோதனை செய்தனர். இந்த முகாமை கலெக்டர் மணிமேகலை நேரில் ஆய்வு செய்தார். திண்டிவனம் கோட்டாட்சியர் செம்புகுட்டி, தாசில்தார் தலைமலை, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாந்தமூர்த்தி, சமூக நல தனி துணை ஆட்சியர் நாகராஜ், சமூக நல தாசில்தார்கள் ஜெயக்குமார், மாணிக்கம், கலெக்டர் அலுவலக கண்காணிப்பாளர் சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


