/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருநள்ளார் பால் கூட்டுறவு சங்கத்தில் கையாடல் செய்த சங்க தலைவர் மீது புகார்திருநள்ளார் பால் கூட்டுறவு சங்கத்தில் கையாடல் செய்த சங்க தலைவர் மீது புகார்
திருநள்ளார் பால் கூட்டுறவு சங்கத்தில் கையாடல் செய்த சங்க தலைவர் மீது புகார்
திருநள்ளார் பால் கூட்டுறவு சங்கத்தில் கையாடல் செய்த சங்க தலைவர் மீது புகார்
திருநள்ளார் பால் கூட்டுறவு சங்கத்தில் கையாடல் செய்த சங்க தலைவர் மீது புகார்
காரைக்கால் : காரைக்காலில் 4.5 லட்சம் ரூபாய் கையாடல் செய்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்க இயக்குநர்கள் கூட்டுறவு பதிவாளரிடம் மனு கொடுத்தனர்.காரைக்கால் திருநள்ளார் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க இயக்குநர் தேர்தலில் பா.ம.க., 6 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
இதையெடுத்து திருநள்ளார் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க இயக்குநர்கள் பக்கிரியம்மாள், சுந்தரவள்ளி, ஆறுமுகம், பழனி, ரவி ஆகியோர் கூட்டுறவு துணை பதிவாளர் மதுரை, கலெக்டர் பிராங்களின் லால்டின்குமா, சீனியர் எஸ்.பி.,ஸ்ரீகாந்த் ஆகியோரை சந்தித்து முத்துக்குமாரசாமி மீது புகார் மனு கொடுத்தனர்.மனுவில், சங்க தலைவர் முத்துக்குமாரசாமி தனது மகள் திருமணத்திற்காக 4.53 லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளது தணிக்கையில் தெரிய வந்துள்ளது. கையாடலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள திருநள்ளார் எம்.எல்.ஏ., சிவாவிடம் தஞ்சம் புகுந்துள்ளார். கையாடல் செய்ததால் சங்க உறுப்பினர்களுக்குப் பால் பண பட்டுவாடா மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் போன்ற அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சங்க நலன்கருதி தலைவரை மாற்றி, கையாடல் செய்துள்ள தொகையை அவரிடமிருந்து திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.