/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பி.எஸ்.என்.எல்.,"ஐ.டி.சி.', கார்டு மூலம் வெளிநாடுகளுக்கு பேசலாம் : பொது மேலாளர் பேட்டிபி.எஸ்.என்.எல்.,"ஐ.டி.சி.', கார்டு மூலம் வெளிநாடுகளுக்கு பேசலாம் : பொது மேலாளர் பேட்டி
பி.எஸ்.என்.எல்.,"ஐ.டி.சி.', கார்டு மூலம் வெளிநாடுகளுக்கு பேசலாம் : பொது மேலாளர் பேட்டி
பி.எஸ்.என்.எல்.,"ஐ.டி.சி.', கார்டு மூலம் வெளிநாடுகளுக்கு பேசலாம் : பொது மேலாளர் பேட்டி
பி.எஸ்.என்.எல்.,"ஐ.டி.சி.', கார்டு மூலம் வெளிநாடுகளுக்கு பேசலாம் : பொது மேலாளர் பேட்டி
ADDED : ஜூலை 14, 2011 09:12 PM
சிவகங்கை : ''வெளிநாடுகளுக்கு பேச, டெலிபோன் ஐ.டி.சி., கார்டுகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்,'' என, பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் ராஜம் தெரிவித்தார்.
சிவகங்கையில், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது. பொது மேலாளர் ராஜம் பேசியதாவது: '' பி.எஸ்.என்.எல்.,மூலம் கிராமங்களுக்கு 500; நகர்புறங்களில் 650, வர்த்தக நிறுவனங்களுக்கு 850 ரூபாய் திட்டத்தில் டெலிபோன் பிராட்பேண்ட் சேவை வழங்கப்படுகிறது. இது தவிர வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் பேச, ஐ.டி.சி., கார்டு பொருத்தி பேசும் திட்டமும் உள்ளது. தமராக்கி, மலம்பட்டியில் மொபைல் டவர் அமைக்கும் பணி முடிந்து விட்டது. சில நாட்களில் இவை செயல்படும். சாத்தரசன்கோட்டை, தாயமங்கலத்தில் விரைவில் மொபைல் டவர் அமைக்கப்படும். கடந்த ஆண்டு மார்ச் வரை டெலிபோன், பிராட்பேண்ட் கட்டண பாக்கி 3 கோடி ரூபாய் இருந்தது. இதில், ஒரு கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 2 கோடியை விரைந்து வசூலிக்க உள்ளோம். மொபைலில் தேவையற்ற தகவல்கள் வருவதை தவிர்க்கவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,'' என்றார். கோட்ட பொறியாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.