ADDED : ஆக 19, 2011 10:01 AM
புதுடில்லி: அன்னா ஹசாரே சிறையை விட்டு வெளிவரும் அந்த நேரத்திற்காக, ஏராளமான மக்கள் சிறை வாசலில் காத்துக்கிடக்கின்றனர்.
3 நாட்கள் சிறைவாசத்தை முடித்துக்கொண்டு, இன்று காலை வெளிவரும் ஹசாரே, அங்கிருந்து ஊர்வலமாக ராம்லீலா மைதானம் செல்கிறார். அவரை வரவேற்க சிறைவாசலில் இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமானோர் சிறைவாசல் முன் திரண்டுள்ளனர். சிறைவாசல் முன் இருந்த ஒருவர் கூறுகையில், தான் நேற்றிரவே இங்கு வந்து விட்டதாகவும், ஊழலுக்கு எதிரான இந்த இயக்கத்தில் கலந்து கொண்டு, ஊழலை இந்த நாட்டை விட்டு ஒழிப்பேன் என ஆவேசமாக தெரிவித்தார்.