/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஓட்டுப்பதிவு நாளில் தாமதம் கூடாது தேர்தல் பணியாளர்களுக்கு "அட்வைஸ்'ஓட்டுப்பதிவு நாளில் தாமதம் கூடாது தேர்தல் பணியாளர்களுக்கு "அட்வைஸ்'
ஓட்டுப்பதிவு நாளில் தாமதம் கூடாது தேர்தல் பணியாளர்களுக்கு "அட்வைஸ்'
ஓட்டுப்பதிவு நாளில் தாமதம் கூடாது தேர்தல் பணியாளர்களுக்கு "அட்வைஸ்'
ஓட்டுப்பதிவு நாளில் தாமதம் கூடாது தேர்தல் பணியாளர்களுக்கு "அட்வைஸ்'
ADDED : அக் 02, 2011 01:50 AM
திருப்பூர் : ''வரும் 17ம் தேதி காலை 7.00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்க வேண்டும் என்பதால், காலை 6.50 மணிக்கு அனைத்து ஓட்டுச்சாவடிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்,'' என தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயலட்சுமி அறிவுறுத்தினார்.திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளில், 425 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
அவற்றில் பணிசெய்ய, 2,500 தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது. நான்கு குழுக்களாக பிரித்து, தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயலட்சுமி பேசியதாவது:தேர்தல் அலுவலர்கள் அனைவரும், தேர்தலுக்கு முந்தைய நாள் மதியம் 12.00 மணிக்கு ஓட்டுச்சாவடிகளை சென்றடைய வேண்டும். முதல் கட்டமாக, தேவையான பொருட்களை மண்டல தேர்தல் அலுவலர்களிடம் பெற்று, சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஓட்டுச்சாவடி எண், ஆண், பெண் வரிசை, ஓட்டுப்பதிவு இடம், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, விரலில் மை வைக்கும் இடம் என, ஒவ்வொரு பகுதியையும் உத்தேசமாக அமைக்க வேண்டும்.தனித்தனி மெஷின்கள் வைக்கப்பட்டிருந்தாலும், மேயர், கவுன்சிலருக்கான ஓட்டுக்களை முறையாக பதிவு செய்ய வலியுறுத்த வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்திவிட்டு, ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதும், 'க்ளோஸ்' பட்டன் அழுத்திவிட்டு, 'பேக்' செய்ய வேண்டும்.
குறிப்பாக, 17ம் தேதி காலை 7.00 மணி முதல் ஓட்டுப்பதிவு துவங்க ஏதுவாக, 6.50 மணிக்கு ஓட்டுச்சாவடிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். ஓட்டுப்பதிவு நிறைவடையும் நேரத்துக்கு முன்பாக, வரிசையில் நிற்பவர்களிடம் 'டோக்கன்' கொடுத்துவிட்டு, நுழைவாயில் கதவுகளை பூட்டிவிட வேண்டும், என்றார்.நஞ்சப்பா பள்ளியில், திருப்பூர் ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பணியாற்றும், தலைமை தேர்தல் அலுவலர்கள், தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் தலைமையில் நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் மதிவாணன், பயிற்சி நடக்கும் பகுதிகளுக்கு சென்று, ஆலோசனை வழங்கினார்


