/உள்ளூர் செய்திகள்/மதுரை/சத்துணவில் "புட்பாய்சன்': பள்ளியில் பரபரப்புசத்துணவில் "புட்பாய்சன்': பள்ளியில் பரபரப்பு
சத்துணவில் "புட்பாய்சன்': பள்ளியில் பரபரப்பு
சத்துணவில் "புட்பாய்சன்': பள்ளியில் பரபரப்பு
சத்துணவில் "புட்பாய்சன்': பள்ளியில் பரபரப்பு
ADDED : செப் 28, 2011 12:59 AM
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள்
பாதிக்கப்பட்டதாக பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
கொட்டாம்பட்டி அருகேயுள்ள
உடப்பன்பட்டி பஞ்., யூனியன் துவக்கப் பள்ளியில், நேற்று மதியம் 2 மணிக்கு,
தேன்மொழி என்ற குழந்தைக்கு 'வலிப்பு' ஏற்பட்டது. அக்குழந்தையை
கருங்காலக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சற்று நேரத்தில்
மற்றொரு குழந்தைக்கு திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் பள்ளியில்
பரபரப்பு ஏற்பட்டது. மதிய உணவுவேளைக்குப் பின் இந்த சம்பவங்கள் நடந்ததால்,
சத்துணவில் 'புட்பாய்சன்' ஏற்பட்டு இருக்கலாம் என பெற்றோர் பெற்றோர்
கருதினர். பயந்துபோனவர்கள் அக்குழந்தையை மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு
சென்றனர்.இத்தகவல் ஊருக்குள் பரவியதால் திரண்டு வந்த பெற்றோர் பள்ளியை
முற்றுகையிட்டனர். மேலூர், கொட்டாம்பட்டி, சிங்கம்புணரியில் இருந்து 108
ஆம்புலன்சுகளும் விரைந்தன. அதேசமயம் வேறு எந்த மாணவர்களுக்கும் பாதிப்பு
இல்லாததால், பள்ளியில் கூடிய பெற்றோரை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தினர்.
போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டது.கொட்டாம்பட்டி அரசு டாக்டர்
சண்முகப்பெருமாள் தலைமையிலான குழுவினர் மாணவர்களை பரிசோதித்தனர். அவர்
கூறுகையில், ''சத்துணவில் புட்பாய்சன் எதுவும் இல்லை. ஒரு குழந்தை 'பிட்ஸ்'
பாதிப்பும், மற்றொரு குழந்தைக்கு வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது தவிர மற்ற
குழந்தைகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை,'' என்றார். தலைமை ஆசிரியை
சுப்புலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் ஜெயராமன் கூறுகையில், ''உணவில் பிரச்னை
இல்லை. மதியம் செயல்வழிக் கற்றல் அட்டையை வைத்து படித்துக் கொண்டிருந்த 2
குழந்தைகள் வேறுவகையில் பாதிக்கப்பட்டனர். பாதிப்பு விபரம் தெரியாத
பெற்றோர் பயத்தில் பள்ளிக்கு வந்துவிட்டனர்,'' என்றார்.@நற்று இரவு 10
மணிக்கு பின் மேலும் 7 குழந்தைகள் வீடுகளில் மயக்கமடைந்தனர். அவர்கள்
மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.