Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நொய்யலில் வனத்தோட்டம்

நொய்யலில் வனத்தோட்டம்

நொய்யலில் வனத்தோட்டம்

நொய்யலில் வனத்தோட்டம்

ADDED : ஆக 19, 2011 01:54 AM


Google News
திருப்பூர்:'தொழில் துறை மானிய கோரிக்கையின்போது , நொய்யல் ஆற்றுப்பாசன பகுதிகளில் வனத்தோட்டங்கள் அமைக்கப்படும்,' என தொழில் துறை அமைச்சர் வேலுமணி அறிவித்ததை, 'டீமா' சங்கம் வரவேற்றுள்ளது.'டீமா' சங்க தலைவர் முத்துரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை:சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றுப்பாசன பகுதிகளில் வனத்தோட்டங்கள், தமிழ்நாடு காகித நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டு, மண் வளம் புத்துயிர் பெறுவதோடு, விவசாயத்துக்கு ஏற்ற நிலமாக மாற்றப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.திருப்பூர் சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண அரசே சுத்திகரிப்பு வாரியம் அமைக்க வேண்டும் என தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,பாண்டியன் பேசியதற்கும் 'டீமா' சங்கம் நன்றி கூறுவதோடு, இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே 'ஜீரோ டிஸ்சார்ஜ்' கழிவு முறை உள்ளது. சரியான வழிகாட்டுதல் இல்லை. இதுவரை சுத்திகரிப்பு நிலையங்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியுள்ளன.

இதற்கு தீர்வு காண, ஐ.ஐ.டி., - அண்ணா பல்கலை - என்.இ.இ.ஆர்.ஐ., போன்ற நிறுவனங்களை உள்ளடக்கிய சாயக்கழிவு நீர் ஆராய்ச்சி நிலையம் அமைத்து, ஆராய்ச்சி மூலம் தீர்வு காண முடியும். திருப்பூர் மட்டுமன்றி ஜவுளித்தொழில் நகரங்களான கரூர், சேலம், ஈரோடு போன்ற நகரங்களிலும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ஏதுவாக இருக்கும், என்று தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us