/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிணம் புதைக்க, எரிக்க கட்டணம் செலுத்த புதிய முறைபிணம் புதைக்க, எரிக்க கட்டணம் செலுத்த புதிய முறை
பிணம் புதைக்க, எரிக்க கட்டணம் செலுத்த புதிய முறை
பிணம் புதைக்க, எரிக்க கட்டணம் செலுத்த புதிய முறை
பிணம் புதைக்க, எரிக்க கட்டணம் செலுத்த புதிய முறை
ADDED : செப் 04, 2011 01:42 AM
புதுச்சேரி:'பிணத்தை எரிக்க, புதைக்க நகராட்சியிலேயே கட்டணம் செலுத்தும்
முறை விரைவில் அமல்படுத்தப்படும்' என, உள்ளாட்சித் துறை அமைச்சர்
பன்னீர்செல்வம் கூறினார்.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த
விவாதம்:நேரு: தென்னஞ்சாலை ரோட் டில் உள்ள இடுகாட்டில் சவ அடக்கத்திற்கு
அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வருவதால் சரியான கட்டணம் நிர்ணயம்
செய்யப்படுமா...அமைச்சர் பன்னீர்செல்வம்: உரிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய
உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.நேரு: சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தவிர்க்க
இடுகாட்டின் கேட்டை இரவு நேரத்தில் பூட்டி வைக்க நடவடிக்கை
எடுக்கப்படுமா...அமைச்சர் பன்னீர்செல்வம்: இரவு நேர நகராட்சி பாதுகாவலரை
நியமித்து கேட்டை பூட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்பழகன்: இடுகாடு,
சுடுகாடுகளில் பிணத்தை அடக்கம் செய்ய, எரிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை
வாங்குவதில்லை. 5000 ரூபாய், 6000 ரூபாய் இல்லாமல் பிணத்தை எரிக்க
முடியாது. யாராவது வந்து பஞ்சாயத்து பேசினால் 3000 ரூபாய் வாங்குவார்கள்.
அப்பாவிகள் போனால் 5000, 6000 ரூபாய் இல்லாமல் எரிக்க முடியாது. சவ அடக்க
உத்தரவை நகராட்சியில் பெறும்போதே, பணத்தை செலுத்தி ரசீது தரும் முறையை
கொண்டு வர வேண்டும்.அமைச்சர் பன்னீர்செல்வம்: நல்ல ஆலோசனை. விரைவில்
அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
லட்சுமிநாராயணன்: பிணம் புதைப்பது, எரிப்பதை இலவசமாக செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.