/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மாணவர்களுக்கு இலவச "லேப்டாப்கள்' திட்டம் முறைகேடுகளை தடுக்க அரசு "அதிரடி' நடவடிக்கைமாணவர்களுக்கு இலவச "லேப்டாப்கள்' திட்டம் முறைகேடுகளை தடுக்க அரசு "அதிரடி' நடவடிக்கை
மாணவர்களுக்கு இலவச "லேப்டாப்கள்' திட்டம் முறைகேடுகளை தடுக்க அரசு "அதிரடி' நடவடிக்கை
மாணவர்களுக்கு இலவச "லேப்டாப்கள்' திட்டம் முறைகேடுகளை தடுக்க அரசு "அதிரடி' நடவடிக்கை
மாணவர்களுக்கு இலவச "லேப்டாப்கள்' திட்டம் முறைகேடுகளை தடுக்க அரசு "அதிரடி' நடவடிக்கை
திருநெல்வேலி : தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகள், அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக் மாணவ, மாணவிகளுக்கு இலவச 'லேப்டாப்கள்' வழங்குவதில் முறைகேடுகளை தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 'லேப்டாப்கள்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பல்வேறு கட்டங்களாக வழங்கல்:இத்திட்டத்தின்படி இந்த ஆண்டு முதற்கட்டமாக பள்ளிகளை பொறுத்தவரை பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கும், அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளை பொறுத்தவரை முதல் மற்றும் 3ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கும், இன்ஜினியரிங் கல்லூரிகளை பொறுத்தவரை 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கும் லேப்டாப்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.அடுத்த ஆண்டில் பிளஸ் 1 மாணவ, மாணவிகள், அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் 2ம் ஆண்டு மாணவ, மாணவிகள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, 4ம் ஆண்டு மற்றும் 5ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கும் படிப்படியாக லேப்டாப்கள் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.விபரங்கள் சேகரிப்பு:<>அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் விபரங்களை சேகரிக்கப்படுகிறது.தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளின் விபரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்காக மாவட்ட வாரியாக முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் புள்ளி விபர பட்டியல் சேகரிக்கும் பணி நடக்கிறது.முறைகேடுகளை தடுக்க அதிரடி:இதற்கிடையில் ஆரம்பத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ள மாணவ, மாணவிகளின் பெயர் விபரம் சேகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது இத்திட்டத்தில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் பெயர், வயது, முழு முகவரி, கல்வி நிறுவனத்தின் பெயர் உட்பட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படுகிறது.இதனால் மாணவ, மாணவிகளின் பெயர்களை மட்டும் வைத்து திட்டத்தில் முறைகேடுகள் நடப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. முழு முகவரி மற்றும் விபரங்கள் இருந்தால் அவர்களிடம் அதிரடியாக ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருவாய்த் துறை மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் அந்தந்த துறைகளின் மூலம் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.செப்.15ல் ஆரம்பம்:<>இப்பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் மாவட்ட வாரியாக இந்த ஆண்டில் லேப்டாப் பெறும் மாணவ, மாணவிகளின் பட்டியல் தயாரிக்கப்படும். தொடர்ந்து மாநில அளவில் இப்பட்டியல் தொகுக்கப்படும். தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் இம்மாணவ, மாணவிகளுக்கு 'லேப்டாப்கள்' வழங்கும் திட்டம் துவக்கப்படும்.இந்த லேப்டாப்களை தரமானதாகவும், மானிட்டர், டிவிடி ரைட்டர், வயர்லெஸ், ஹார்ட் டிஸ்க், கேமிரா உட்பட பல்வேறு வசதிகளும், அதிக திறன் கொண்டதாகவும் இருக்கும் வகையில் கொள்முதல் செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம்:<>நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 150 அரசு மேல்நிலைப் பள்ளிகள், ஒரு இன்ஜினியரிங் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக், 13 அரசு கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளின் விபரங்கள் குறித்த பட்டியல் கணக்கெடுப்பு பணிகளும் துவக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர்.


