/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடியில் பைக் திருட்டுமர்ம நபருக்கு போலீஸ் வலைதூத்துக்குடியில் பைக் திருட்டுமர்ம நபருக்கு போலீஸ் வலை
தூத்துக்குடியில் பைக் திருட்டுமர்ம நபருக்கு போலீஸ் வலை
தூத்துக்குடியில் பைக் திருட்டுமர்ம நபருக்கு போலீஸ் வலை
தூத்துக்குடியில் பைக் திருட்டுமர்ம நபருக்கு போலீஸ் வலை
ADDED : செப் 03, 2011 01:45 AM
தூத்துக்குடி:தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன் முன்பு நிறுத்தியிருந்த பைக்
திருட்டு போனது. பைக்கை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது; தூத்துக்குடி பகுதியை
சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் ஜெயகணேஷ்(32) சம்பவத்தன்று இவர் தூத்துக்குடி
ரயில்வே ஸ்டேஷன் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு
சென்றார். பின்னர் வீடு திரும்புவதற்காக பைக்கை நிறுத்திய இடத்திற்கு
வந்தார். அங்கு நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லையாம். இதனால்
அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களுக்கு சென்று தேடி பார்த்தார். பைக்
குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லையாம். இதனையடுத்து ஜெயகணேஷ்
தூத்துக்குடி மத்திய பாகம் போலீசில் புகார் தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர்
வீரபுத்திரன் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.