Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தேமுதிக கூட்டணி "டமார்'...அதிமுக, திமுகவினர் "குஷி'

தேமுதிக கூட்டணி "டமார்'...அதிமுக, திமுகவினர் "குஷி'

தேமுதிக கூட்டணி "டமார்'...அதிமுக, திமுகவினர் "குஷி'

தேமுதிக கூட்டணி "டமார்'...அதிமுக, திமுகவினர் "குஷி'

ADDED : அக் 04, 2011 01:52 AM


Google News

திருநெல்வேலி : தேமுதிக கூட்டணியில் குழப்பம் நீடிப்பதால் அதிமுக, திமுக கட்சியினர் 'குஷி' அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களத்தில் வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்து நேற்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பிரசாரம் தீவிரமாகும் சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் களம் 'சூடு' பிடித்துள்ளது. தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுகிறது. எனினும், கடைசி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேமுதிகவுடன், மா.கம்யூ., இந்திய கம்யூ., கட்சிகள் கூட்டணி வைத்தது. ஆனால் அதற்குள் இக்கட்சி நிர்வாகிகள் வேட்பு மனுத்தாக்கல் செய்த நிலையில் இடங்களை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, செல்வாக்கு உள்ள பகுதிகளை இரு கம்யூ., கட்சிகளும் கேட்க தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது.



நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை களக்காடு, நான்குநேரி டவுன் பஞ்.,களில் தேமுதிகவும், இந்திய கம்யூ.,வும் போட்டியிடுகிறது. இதே போல், பல்வேறு டவுன் பஞ்.,கள், நகராட்சிகளிலும் குழபம் உள்ளது. நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை முதலில் மேயர் பதவி இந்திய கம்யூ., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இக்கட்சியின் சார்பில் வேட்பாளர் கடைசி வரை நிறுத்தப்படாததால் தேமுதிக வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். மாநகராட்சியில் 55 வார்டுகளில் தலா 6 வார்டுகள் கம்யூ., கட்சிகளுக்கு ஒதுக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் இதில் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டுள்ளதால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.



மாநகராட்சில் 1,31,44 ஆகிய 3 வார்டுகள் இந்திய கம்யூ., கட்சிக்கும், 15,19, 27, 32, 42 ஆகிய வார்டுகள் மா.கம்யூ.,கட்சிக்கும் ஒதுக்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள வார்டுகளை ஒதுக்குவதில் இரு கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டதால் எந்த கட்சிக்கும் வர்டுகளை ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. 54வது வார்டில் 3 கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் உச்ச கட்ட குழப்பம் நிலவுகிறது. மாநகராட்சி 48 மற்றும் 49வது வார்டுகளில் தேமுதிகவும், இந்திய கம்யூ.,வும் நேரடியாக மோதும் சூழ்நிலையில் கூட்டணி கேள்விக்குறியை எட்டியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தேமுதிக, மா.கம்யூ., இந்திய கம்யூ., கட்சியினர் கூறினாலும் கூட்டணியில் இருந்து இந்திய கம்யூ., வெளியேறி சில இடங்களில் தனித்து போட்டியிடுகிறது. தேமுதிக கூட்டணி பலமாக காணப்பட்டால் இக்கூட்டணிக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கும். ஆனால் கூட்டணியில் குழப்பம் நிலவுவதால் இந்த ஓட்டுகள் பிரியும் சூழ்நிலையில் இந்த ஓட்டுகள் தங்களுக்கு சாதகமாக அமையும் என அதிமுக, திமுகவினர் 'குஷி' அடைந்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us