Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை மாநகராட்சியில் அதிமுக, திமுக "வேஸ்ட்' மாற்றத்திற்கு ஐ.ஜே.கே பொது செயலாளர் "சபதம்'

நெல்லை மாநகராட்சியில் அதிமுக, திமுக "வேஸ்ட்' மாற்றத்திற்கு ஐ.ஜே.கே பொது செயலாளர் "சபதம்'

நெல்லை மாநகராட்சியில் அதிமுக, திமுக "வேஸ்ட்' மாற்றத்திற்கு ஐ.ஜே.கே பொது செயலாளர் "சபதம்'

நெல்லை மாநகராட்சியில் அதிமுக, திமுக "வேஸ்ட்' மாற்றத்திற்கு ஐ.ஜே.கே பொது செயலாளர் "சபதம்'

ADDED : அக் 01, 2011 11:30 PM


Google News

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் அதிமுக, திமுக மேயர்கள் இதுவரை மக்களுக்கு எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்று ஐ.ஜே.கே அகில இந்திய பொது செயலாளர் மதன் கூறினார்.



இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது: நெல்லை மாநகராட்சியாக எப்போது அறிவிக்கப்பட்டதோ அன்றில் இருந்து இன்று வரை ஒரு நகராட்சி அந்தஸ்தில்தான் உள்ளது. இதுவரை அதிமுக, திமுக கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமே மேயர்களாக இருந்தனர். ஆனால் மாநகராட்சி வளர்ச்சிக்கோ, மக்களுக்கோ எந்தவித திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஏழைகளுக்கு இலவச மின்விசிறி, கிரைண்டர், ஆடு, மாடு, லேப்டாப், ஏழை பெண்களுக்கு திருமண நிதி போன்ற திட்டங்களை அறிவித்த அதிமுகவினர் நெல்லை மாநகராட்சி பகுதியில் இதுவரை யாருக்கு இந்த நலத்திட்டங்களை வாங்கி தந்துள்ளனர்.



மாநகராட்சியில் குடிநீர், சாலை, சுகாதார வசதிகள் இல்லை என எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கூறுகிறார். ஆனால் அவரது கட்சியை சேர்ந்த மேயர் பதவி காலத்தில் ஏதாவது வசதிகள் செய்து தரப்பட்டதா. மானூர் பள்ளமடை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவேன் என்று அவர் கூறினார். ஆனால் இதுவரை அவரால் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. நயினார்குளத்தை அழகுபடுத்தும் திட்டம் வெறும் கண்துடைப்புதான். இதே போல், கடந்த 5 ஆண்டுகளில் திமுக மேயர் காலத்திலும் எந்தவித பணிகளும் நடக்கவில்லை. வண்ணார்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வடக்கு, தெற்காக கட்டப்பட்ட பாலத்தை யாரும் பயன்படுத்தவில்லை. ஒரு சிலரை திருப்திபடுத்த கிழக்கு, மேற்காக பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் தீராமல் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி பகுதியில் குண்டும், குழியுமான சாலைகள் காணப்படுகிறது. துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.



தாமிரபரணி ஆறு ஓடும் பகுதியில கூட வாரத்திற்கு ஓரிரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. திமுக வேட்பாளரை வீட்டிற்கு அனுப்ப மக்கள் ஐ.ஜே.கே வேட்பாளர் டாக்டர் ஷகிலாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். எங்களுக்கு ஆதரவு அளித்தால் நெல்லை மாநகராட்சியை முன் மாதிரியான மாநகராட்சியாக மாற்றி காட்டுவோம். நெல்லை மாநகராட்சி பகுதியில் தெருக்களுக்கு சிமென்ட் சாலைகள் அமைக்கப்படும். நயினார்குளத்திற்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் வருவது தற்போது ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நிரந்தரப்படுத்தப்படுவர். மாநகராட்சியை வருவாயை தேடித் தர 'தீம் பார்க்' அமைக்கப்படும். பிறப்பு, இறப்பு சான்றிதழ் 24 மணி நேரத்தில் வழங்கப்படும். 400 சதுர அடி வீடுகளுக்கு வீட்டு வரி ரத்து செய்யப்படும். ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். பொருட்காட்சி திடலில் நவீன அங்காடி கட்டப்பட்டு மாநகராட்சி வருவாய் பெருக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நிர்வாகிகள் பாலகுருநாதன், ரமேஷ் பாண்டியன், செல்வராஜ், ராஜேஷ், ரவி யாதவ், டாக்டர் ஷகிலா ஆகியோரும் உடனிருந்தனர். இதில் மாவட்டத்தில் ஐ.ஜே.கே சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஐ.ஜே.கே அகில இந்திய பொது செயலாளர் மதன் அறிமுகப்படுத்தினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us