ADDED : ஆக 26, 2011 12:10 AM
ஊட்டி : அகில இந்திய தேசிய மின்சார தொழிலாளர் சம்மேளன (ஐ.என்.டி.யு.சி.) பொது செயலாளர் மஞ்சை மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: வலிமையான இந்தியா என நமது நாடு உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைந்து ஊழலை ஒழிக்க இன்று காலை 11.00 மணி முதல் 11.02 மணி வரை 2 நிமிடம் அமைதியான முறையில் ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.
அந்த நேரத்தில், அனைத்து மின் சாதனைங்களையும் இயக்குவதை நிறுத்தி வைப்பது; பள்ளி கல்லூரி மாணவர்கள் 2 நிமிடம் மவுனமாக அவரவர் இடத்தில் நின்று, ஊழலை ஒழிக்க சபதம் எடுப்பது; இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், போக்குவரத்து கழக வாகனங்கள் அனைத்து அரசு, தனியார் வாகனங்கள் அமைதியான முறையில் அந்தந்த இடத்தில் நிறுத்த வேண்டும்; விவசாயிகள், தொழிலாளர்கள், தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், அரசு பொதுத்துறை அலுவலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், தனியார் வணிக நிறுவன ஊழியர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் என அனைவரும் 2 நிமிடம் வேலையை செய்யாமல் ஊழலுக்கு எதிரான ஆதரவை அளிக்க வேண்டுகிறோம். இவ்வாறு மஞ்சை மோகன் கூறியுள்ளார்.


