/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கும் வெளியீடு மொத்தம் 30 சின்னங்கள் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரமேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கும் வெளியீடு மொத்தம் 30 சின்னங்கள் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தர
மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கும் வெளியீடு மொத்தம் 30 சின்னங்கள் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தர
மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கும் வெளியீடு மொத்தம் 30 சின்னங்கள் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தர
மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவருக்கும் வெளியீடு மொத்தம் 30 சின்னங்கள் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தர
ADDED : செப் 25, 2011 12:50 AM
தூத்துக்குடி : மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய மற்றும் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்குரிய சுயேட்சை சின்னங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதே போல் சுயேட்சையாக போட்டியிடும் மேயர், நகராட்சி தலைவர்களுக்குரிய சுயேட்சை சின்னங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்த மாதம் இரண்டு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்குரிய வேட்புமனு தாக்கல் துவங்கி நடந்து வருகிறது. நாளை முதல் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.உள்ளாட்சி தேர்தலை பொறுத்தமட்டில் அரசியல் கட்சி வேட்பாளர்களை விட சுயேட்சைகள் அந்த பகுதியில் உள்ள செல்வாக்கின் காரணமாக அதிகமாக போட்டியிடுவர். சுயேட்சைகளாக போட்டியிடுவோருக்கு தேர்தலில் எந்த சின்னங்கள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சேவியர் கிறிஸ்தோ நாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள், மூன்றாம் நிலை நகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி, நகராட்சி சுயேட்சை கவுன்சிலர்களுக்கு ஒதுக்க வேண்டிய சின்னங்கள் விபரம்; கிட்டார் (இசைக்கருவி), அடையாள குறி (பேட்ஜ்), மறை திருக்கி (ஸ்பேனர்), வைரம் (டைமண்ட்), உலக உருண்டை (குளோப்), முகம் பார்க்கும் கண்ணாடி (மிரர்), அசைந்தாடும் நாற்காலி (ராக்கிங் சேர்), புட்டி (பாட்டில்) ஊஞ்சல் (ஸ்விங்), நீளக் குவளை (மக்), சாலை உருளை (ரோடு ரோலர்), பூப்பந்து மட்டை (பால் பேட்மிட்டன்), திருகு ஆனி (ஸ்கூரு நெய்ல்), மேற்சட்டை (கோட்டு), கோப்பு அடுக்கும் அலமாரி (பைல் ரேக்), முள் கரண்டி (போர்க்), கொதி கெண்டி (கெட்டில்), ஹாக்கி மட்டையும் பந்தும் (ஹாக்கி அயின்ட் பால்), மகளிர் பணப்பை (லேடி பர்ஸ்), மேசை விளக்கு (டேபிள் லேம்ப்), கொம்பு ஊதும் இசைக்கருவி (டிரம்பட்), கைப்பை (கேன்ட் பேக்), தீப்பெட்டி (மேட்ச் பாக்ஸ்), கழுத்துக்கச்சு (நெக் டை), அலமாரி, குலையுடன் கூடிய தென்னைமரம், அரிக்கேன் விளக்கு, கரண்டி (ஸ்பூன்), தண்ணீர் குழாய், உலாவிற்கான தடி (வாக்கிங் ஸ்டிக்) ஆகிய 30 சின்னங்கள் சுயேட்சைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சின்னங்களில் இருந்து சுயேட்சை கவுன்சிலர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். மாவட்ட கவுன்சிலர்கள், டவுன் பஞ்சாயத்து தலைவர், மூன்றாம் நிலை நகராட்சி தலைவர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் மாநகராட்சி மேயர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவோருக்கு 30 வகை சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சின்னங்களில் இருந்து அவர் விரும்பும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த சின்னங்கள் பெயர் விபரம் வருமாறு; பதக்கம், கோட்டை, கேரம்போர்டு, கணிப்பொறி, மேசை மின் விசிறி (டேபிள் பேன்), சீத்தாப்பழம், பேருந்து, குறுக்காக உள்ள இரு கூர் வாகனங்கள், கோப்பையும் தட்டும், பளுதூக்குதல், சட்டை, சட்டை மாட்டி, ரயில் தண்டவாளம், பற்றுக்குறடு (கட்டிங் பிளேயர்ஸ்), சிறு பெட்டி, லென்ஸ் கண்ணாடி, மட்டை, இரட்டை நாதஸ்வரம், கைப்பம்பு, அரைக்கச்சை (பெல்ட்), மை எழுதுகோல் (பவுண்டைன் பென்), சாய்வு மேசை (டெஸ்க்), கைக் கடிகாரம், மைக்கூடு (இங் பாட்டில்), வளையல்கள், பேட்டரி விளக் கு, பூந்தொட்டி, நீள மர இருக் கை, புத்தகம், டிஷ் ஆண்டனா ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேயர் பதவிக்கு போட்டியிடும் சுயே ட்சை வேட்பாளர்கள் இதில் இருந்து ஒரு சின்னத்தை தேர்வு செய்யலாம். போட்டியில்லாமல் இருந்தால் அந்த நபருக்கு வழங்கப்படும். போட்டியிருந்தால் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.