ADDED : ஆக 25, 2011 11:51 PM
தேவதானப்பட்டி : விநாயகர் சதூர்த்தி விழாவிற்காக, புதிய விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி மறுப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
செப். 1ல் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இதற்காக போலீசார் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். கடந்த ஆண்டில், வழிபாடு நடத்தப்பட்ட கிராமங்களில் மட்டும் சிலை வைக்க போலீசார் அனுமதிக்கின்றனர். பல ஆண்டுகளாக சிலை வைத்து, கடந்த ஆண்டில் வைக்கமுடியாமல் போனாலும் அனுமதி மறுக்கப்படுகிறது. சில கிராமங்களில் இளைஞர்கள் ஆர்வத்துடன் சிலை வைக்க விரும்பினாலும் முடியவில்லை. போலீசாரின் இந்த கட்டுப்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., மாவட்ட வர்த்தக அணித்தலைவர் கோபிகண்ணன் கூறுகையில், கட்டுப்பாடு என்ற பெயரில், போலீசார் மக்களின் உணர்வுகளுக்கு மதிக்பளிக்க மறுக்கின்றனர்,என்றார்.