/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அன்னை சிவகாமி பள்ளியில் மண்டல அறிவியல் கருத்தரங்கம்அன்னை சிவகாமி பள்ளியில் மண்டல அறிவியல் கருத்தரங்கம்
அன்னை சிவகாமி பள்ளியில் மண்டல அறிவியல் கருத்தரங்கம்
அன்னை சிவகாமி பள்ளியில் மண்டல அறிவியல் கருத்தரங்கம்
அன்னை சிவகாமி பள்ளியில் மண்டல அறிவியல் கருத்தரங்கம்
ADDED : ஆக 11, 2011 02:50 AM
புதுச்சேரி: மக்கள் நலனில் வேதியியல் என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கு
மண்டல அறிவியல் கருத்தரங்கம் முதலியார்பேட்டை அன்னை சிவகாமி பள்ளியில்
நடந்தது.
பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற மண்டல அறிவியல் கருத்தரங்கம்
மக்கள் நலனில் வேதியியல் என்ற தலைப்பில் முதலியார்பேட்டை அன்னை சிவகாமி
பள்ளியில் நடந்தது. இதில் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும்
தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 85 பேர் கலந்து கொண்டு தங்கள் அறிவியல்
கருத்துக்களை ஆய்வு அறிக்கையாக சமர்ப்பித்தனர். பட்டமேற்படிப்பு மைய
வேதியியல் பேராசிரியர் மோகன்ராஜ், கரிக்கலாம்பாக்கம் துணை முதல்வர்
மூர்த்தி, கல்வே காலேஜ் மேல்நிலைப்பள்ளி வேதியியல் விரிவுரையாளர் நடனசபாபதி
உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்து சிறந்த அறிவியல் ஆய்வு அறிக்கையைத் தேர்வு
செய்தனர்.