செம்பை பாகவதர் 115வது பிறந்த நாள் விழா
செம்பை பாகவதர் 115வது பிறந்த நாள் விழா
செம்பை பாகவதர் 115வது பிறந்த நாள் விழா
ADDED : ஆக 19, 2011 07:08 PM
பாலக்காடு: பாலக்காடு அருகேயுள்ள கோட்டாயி செம்பை அக்ரகாரத்தில், கர்நாடக இசையில் பிரபலமான செம்பை வைத்யநாத பாகவதரின் 115வது பிறந்த நாள் விழா, செம்பை வித்யாபீடம் சார்பில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.
விழாவையொட்டி நடைபெறும் இன்னிசை விழாவை, கேரள கலாமண்டலம் கோபி நாளை காலை 11.30 மணிக்கு, செம்பை பாகவதரின் உருவச்சிலை முன் குத்துவிளக்கேற்றி, துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, பாலக்காடு சூர்யநாராயணன் குழுவினரின் புல்லாங்குழல் இசைக் கச்சேரி நடக்கிறது. சதனம் ஹரிகுமார், வெள்ளினேழி சுப்ரமணியன், சேற்றூர் ராதாகிருஷ்ணன், மாடபி வாசுதேவன் நம்பூதிரி, பிரதீன் ஒற்றப்பாலம், கே.பி.கே., குட்டி ஆகியோரின் கச்சேரியும் நடக்கிறது. ஆக. 21ல், செம்பை வித்யா பீடத்தின், 26வது ஆண்டு விழாவை, ஏ.கே.பாலன், எம்.எல்.ஏ., துவக்கி வைக்கிறார். இதையடுத்து, மண்ணூர் ராஜாகுமாரன் உன்னியின் இன்னிசை நடக்கிறது. இதில், கேரள-தமிழகத்தைச் சேர்ந்த, 500 கலைஞர்கள் பாடுகின்றனர். செம்பை ஸ்ரீனிவாசன் தலைவராகவும், கிழத்தூர் முருகன் செயலராகவும் வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.