/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கண்காணிப்பு கேமரா பழுது: குழந்தையை கொலை செய்தவரை பிடிப்பதில் சிக்கல்கண்காணிப்பு கேமரா பழுது: குழந்தையை கொலை செய்தவரை பிடிப்பதில் சிக்கல்
கண்காணிப்பு கேமரா பழுது: குழந்தையை கொலை செய்தவரை பிடிப்பதில் சிக்கல்
கண்காணிப்பு கேமரா பழுது: குழந்தையை கொலை செய்தவரை பிடிப்பதில் சிக்கல்
கண்காணிப்பு கேமரா பழுது: குழந்தையை கொலை செய்தவரை பிடிப்பதில் சிக்கல்
ADDED : ஆக 26, 2011 11:25 PM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் கண்காணிப்பு கேமரா பழுதால், குழந்தையை கடலில் மூழ்கடித்து கொலை செய்தவரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் ஆறு மாத பெண் குழந்தை இறந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு கரை ஒதுங்கியது.
ரோஸ் நிற சட்டை அணிந்திருந்த குழந்தை பற்றி மீனவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் போலீசார் கூறியதாவது:கரை ஒதுங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் கடலில் மூழ்கடித்து கொலை செய்திருக்க வேண்டும். வாரிசு, சொத்து அல்லது தவறான உறவு ஆகிய ஏதாவது காரணத்தால் நீரில் மூழ்கடித்து கொல்லப்பட்டிருக்கலாம், என்றனர். கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டதா அல்லது பெற்றோரே கொன்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.அக்னிதீர்த்த கடற்கரையில் செயலிழந்த கண்காணிப்பு கேமரா குறித்து 'தினமலர்' இதழில் செய்தி நேற்று முன்தினம் செய்தி வெளியானது. கேமரா பயன்பாட்டில் இருந்திருந்தால் இந்த கொடூரச் செயலை செய்தவர் யார் என தெரிந்திருக்கும். இந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. குழந்தையின் உறவினர்கள் யாராவது தகவல் தெரிவித்தால் தான் குற்றவாளிகளை பிடிக்க முடியும்.


