Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பள்ளிவாசலுக்கு நான் செல்லப் பிள்ளை: அமைச்சர் கோகுல இந்திரா நெகிழ்ச்சி

பள்ளிவாசலுக்கு நான் செல்லப் பிள்ளை: அமைச்சர் கோகுல இந்திரா நெகிழ்ச்சி

பள்ளிவாசலுக்கு நான் செல்லப் பிள்ளை: அமைச்சர் கோகுல இந்திரா நெகிழ்ச்சி

பள்ளிவாசலுக்கு நான் செல்லப் பிள்ளை: அமைச்சர் கோகுல இந்திரா நெகிழ்ச்சி

ADDED : செப் 17, 2011 11:43 PM


Google News

அண்ணா நகர்: ''பள்ளிவாசலுக்கு நான் செல்ல பிள்ளை,'' என, சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா நெகிழ்ச்சியுடன் பேசினார்.



அண்ணாநகர் ஜமாத்தின் சார்பில், 'ஈட் மிலன்' என்கிற, சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இஸ்லாம் பற்றி சரியாக புரிந்து கொள்ளும் வகையிலும், ரம்ஜான் பண்டிகையை பிற சமுதாயத்தினருடன் கொண்டாடும் விதமாகவும், இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது: நான் இருந்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பள்ளிவாசலுக்கு, நான் தான் செல்லப்பிள்ளை. அந்தளவிற்கு நான் அங்கு அனைவருக்கும் அறிமுகமாகியிருந்தேன். ஆனால், என்னிடம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த தொகுதியில், என்னை வெற்றி பெற செய்ததற்கு நன்றி. வழிபாட்டு முறைக்கு மட்டுமே தான் மதங்கள். தவிர, நாம் அனைத்து விசயத்திலும் ஒன்றாகத் தான் இருக்கிறோம். இந்த மத நல்லிணக்கத்தை நாம் அடுத்த சந்ததியினரிடமும் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு கோகுல இந்திரா பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர் முகம்மது கான், எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, ஆற்காடு நவாப் முகம்மது அப்துல் அலி, ஹபீப் முகம்மது, அலாவுதீன் உள்ளிட்டோர், பங்கேற்று பேசினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us