Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழ்மொழியில் ஊடகக்கலைக் கல்வி

தமிழ்மொழியில் ஊடகக்கலைக் கல்வி

தமிழ்மொழியில் ஊடகக்கலைக் கல்வி

தமிழ்மொழியில் ஊடகக்கலைக் கல்வி

ADDED : ஜூலை 28, 2011 05:14 PM


Google News

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் மேற்பட்டப் படிப்பு நிøயில் ஊடகக்கலைக் கல்வி தமிழ்வழியில் கற்றுத்தரப்பட உள்ளது.

இதைத் துவக்கி வைத்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன், இந்த முயற்சிக்காக ஊடகக்கலைத் துறை டீன் மறைதிரு. ராஜநாயகத்திற்கு பாராட்டு தெரிவித்தார். விழாவில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர்கள் பிரபு சாலமன், சீனு ராமசாமி ஆகியோரை துறையின் பேராசிரியர் ரேவதி ராபர்ட் அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரி முதல்வர் பி.ஜெயராஜ் வரவேற்றார். விழாவில் மாணவர்கள், பாரதியார் பாடலைப் பாடினர்; தமிழில் உரை நிகழ்த்தினர். ஊடகத்துறை மாணவர் சங்கமும் அமைக்கப்பட்டது. ஊடகம் தொடர்பான மாநாடுகள் மற்றும் போட்டிகளை இது நடத்தும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us