Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டி கேரளா கிளப் 78ம் ஆண்டு கூட்டம்

ஊட்டி கேரளா கிளப் 78ம் ஆண்டு கூட்டம்

ஊட்டி கேரளா கிளப் 78ம் ஆண்டு கூட்டம்

ஊட்டி கேரளா கிளப் 78ம் ஆண்டு கூட்டம்

ADDED : ஆக 11, 2011 04:49 AM


Google News
ஊட்டி:ஊட்டி கேரளா கிளப்பின் 78ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கேரளா கிளப் வளாகத்தில் நடந்தது.இதில், அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆயுள் காப்பீடு எடுப்பது; சமூக சேவையை அதிகப்படுத்த புதிய டிரஸ்ட் அமைப்பது என்பன போன்றவை தீர்மானிக்கப்பட்டன.கடந்த இரு ஆண்டுகளின் நிகழ்வு குறித்து செயலாளர் நித்யா சத்யாவும், ஆண்டு கணக்கறிக்கையை பொருளாளர் சேவியரும் வாசித்தனர்.

புதிய செயற்குழு உறுப்பினர்களுக்கு காப்பாளர் கிரிஜன் சத்யபிரமாணம் செய்து வைத்தார். காப்பாளர்கள் கிருஷ்ணதாஸ், சாத்தப்பன் பேசினர்.பின்பு நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், காப்பாளர்களாக நாராயணன், கிரிஜன், நித்யசத்யா, சாத்தப்பன், கிருஷ்ணதாஸ், தலைவராக சேவியர், துணைத் தலைவராக பிரபாகரன், கோபாலகிருஷ்ணன், பொது செயலாளராக மதுநம்பியார், துணை செயலாளராக முஸ்தபா, பொருளாளராக பிரபாகரன், துணை பொருளாளராக ஷாஜூ வர்கீஸ், ஒருங்கிணைப்பு செயலாளராக ராஜ்குமார், சிபுபடயாட்டில், அனூப், சட்ட ஆலோசகராக வக்கீல் நாராயணகுட்டி, செயற்குழு உறுப்பினர்களாக கணேஷ், ஜெயராம்தாஸ், சசிதரன், ராம்தாஸ், ஆண்டனி, பிஜு, சிவதாஸ், பிரகாஷ் சைமன், பிரகாஷ், ராஜேஷ், சீனிவாசன், தேவன், விஜயன், பிரகாஷ், மொய்தீன், சிவராமன், ரவீந்திரநாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us