Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/போர் குற்றவாளிகள்: மாஜி அமைச்சர் மறுப்பு

போர் குற்றவாளிகள்: மாஜி அமைச்சர் மறுப்பு

போர் குற்றவாளிகள்: மாஜி அமைச்சர் மறுப்பு

போர் குற்றவாளிகள்: மாஜி அமைச்சர் மறுப்பு

ADDED : செப் 18, 2011 11:55 PM


Google News

ராஜ்கோட்: ''பாகிஸ்தான் சிறையில், இந்திய போர்க் குற்றவாளிகள் யாரும் தற்போது இல்லை,'' என, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் இக்பால் ஹைதர் தெரிவித்துள்ளார்.



காணாமல் போன, இந்திய போர்க் குற்றவாளிகளின் உறவினர்களை சந்திப்பதற்காக, பாகிஸ்தான் முன்னாள் சட்ட அமைச்சர் இக்பால் ஹைதர், குஜராத் வந்துள்ளார்.

இது குறித்து ஹைதர் குறிப்பிடுகையில், ''1971ல் நடந்த சண்டைக்கு பின், இந்தியாவைச் சேர்ந்த, 54 போர்க் குற்றவாளிகளை காணவில்லை என, சமூக சேவகர் எம்.கே.பால், பட்டியல் கொடுத்துள்ளார். தற்போதைய நிலையில், பாகிஸ்தானில் இந்திய போர்க் குற்றவாளிகள் யாரும் சிறையில் இல்லை. ''காணாமல் போனவர்களை குறித்த விவரங்களை அளித்தால், அது குறித்து ஆராய்ந்து வேறு வழக்கில் அவர்கள் அடைக்கப்பட்டிருந்தால் அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us