Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/கொலை வழக்கில் தலைமறைவானவர் ரிமாண்ட்

கொலை வழக்கில் தலைமறைவானவர் ரிமாண்ட்

கொலை வழக்கில் தலைமறைவானவர் ரிமாண்ட்

கொலை வழக்கில் தலைமறைவானவர் ரிமாண்ட்

ADDED : செப் 17, 2011 03:11 AM


Google News

மதுரை : கொலை வழக்கில் இரு ஆண்டுகளாக தலைமறைவானவர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தார்.

அவரை ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.மதுரை செல்லூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டவர் மதுரை குலமங்கலம் ஆலங்குளத்தைச் சேர்ந்த சம்சுதீன் மகன் அபுதாகீர். இவரது சகோதாரர்கள் ராஜாமுகமது. தாவூத்கனி. இவர்கள் 3 பேரும் 2009 ம் ஆண்டில் ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தனர். தலைமறைவாக இருந்த அபுதாகீர் முன்ஜாமின் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். உரிய கோர்ட்டில் சரணடையுமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. சரணடைந்த அபுதாகீரை ரிமாண்ட் செய்ய முதன்மை செஷன்ஸ் நீதிபதி (பொறுப்பு) ராஜசேகரன் உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us