ADDED : செப் 06, 2011 01:03 AM
புதுச்சேரி: வ.உ.சி., பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்தார்.
அரசு சார்பில் வ.உ.சி., பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சட்டசபை எதிரில் உள்ள வ.உ.சி., சிலைக்கு நேற்று காலை முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதிய நீதி கட்சி தலைவர் பொன்னுரங்கம் மற்றும் நிர்வாகிகள், வ.உ.சி., இளைஞர் பேரவை நிறுவனர் மதிவாணன், செயலாளர் வி.சி.சி. நாகராஜன், தலைவர் அசோக் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.