/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குளங்களில் வண்டல், கரம்பை மண் விவசாயிகளுக்கு புதிய வசதி அமல்குளங்களில் வண்டல், கரம்பை மண் விவசாயிகளுக்கு புதிய வசதி அமல்
குளங்களில் வண்டல், கரம்பை மண் விவசாயிகளுக்கு புதிய வசதி அமல்
குளங்களில் வண்டல், கரம்பை மண் விவசாயிகளுக்கு புதிய வசதி அமல்
குளங்களில் வண்டல், கரம்பை மண் விவசாயிகளுக்கு புதிய வசதி அமல்
ADDED : ஆக 28, 2011 01:11 AM
திருநெல்வேலி : நெல்லை மாவட்ட குளங்களில் வண்டல், கரம்பை மண் அள்ள விவசாயிகளுக்கு புதிய வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நிலங்களுக்கு தேவையான வண்டல் மற்றும் கரம்பை மண் ஆகியவற்றை கலெக்டர் உத்தரவிற்காக நெல்லை கனிம வளத் துறை துணை இயக்குனர் மூலமாக விண்ணப்பித்து ஆணை பெறும் முறை நடைமுறையில் இருந்தது.
இதனால் பெரிதும் காலதாமதம் ஏற்பட்டதால் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக நெல்லையில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களின் தேவைக்காக அரசுக்கு சொந்தமான குளங்களில் இருந்து வண்டல் மற்றும் கரம்பை மண் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்த விரைவாக அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனை பரிசீலனை செய்த கலெக்டர், விவசாயிகளின் நலன் கருதி அவர்கள் வசிக்க கூடிய அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர்/பஞ்.,யூனியன் ஆணையாளர் ஆகியோரிடம் விண்ணப்பித்து அனுமதி ஆணையை பெற்று கொள்ள உத்தரவிட்டார். இந்த வாய்ப்பை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.


