Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மண் பரிசோதனை ஆய்வு முடிவுக்கு ஏற்ப உரத்தை பயன்படுத்த அதிகாரி வேண்டுகோள்

மண் பரிசோதனை ஆய்வு முடிவுக்கு ஏற்ப உரத்தை பயன்படுத்த அதிகாரி வேண்டுகோள்

மண் பரிசோதனை ஆய்வு முடிவுக்கு ஏற்ப உரத்தை பயன்படுத்த அதிகாரி வேண்டுகோள்

மண் பரிசோதனை ஆய்வு முடிவுக்கு ஏற்ப உரத்தை பயன்படுத்த அதிகாரி வேண்டுகோள்

ADDED : ஆக 08, 2011 03:45 AM


Google News
திருநெல்வேலி : மண் பரிசோதனை ஆய்வு முடிவுக்கு ஏற்ப ரசாயன மற்றும் இயற்கை உரங்களை இடுவதுடன், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி திருந்திய நெல்சாகுபடி செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் தேவசகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது;நெல்லை மாவட்டம், அம்பை, கடையம், சேரன்மகாதேவி, முக்கூடல், பாளை., மானூர், தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டாரங்களில் விவசாயிகள் கார் பருவ நெல் சாகுபடி செய்து வருகின்றனர். மாவட்டத்திற்கு கார் சாகுபடி பருவம் முடிய யூரியா 24 ஆயிரத்து 500 மெட்ரிக் டன்னும், டிஏபி., 7ஆயிரத்து 200 மெ.டன்னும், பொட்டாஷ் 10 ஆயிரம் மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 11 ஆயிரத்து 20 மெ.டன்னும் தேவை என அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இதுவரை யூரியா 9 ஆயிரத்து 600 மெ.டன்னும், டிஏபி., ஆயிரத்து 936 மெ.டன்னும், பொட்டாஷ் 2ஆயிரத்து 107 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 5ஆயிரத்து 592 மெ.டன்னும் சம்பந்தப்பட்ட உர நிறுவனங்கள் சப்ளை செய்துள்ளன. இதில் பொட்டாஷ், டிஏபி., உரங்கள் சப்ளை குறைவாக உள்ளது.எனவே விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண்ணை பரிசோதனை செய்து, மண் பரிசோதனை ஆய்வு முடிவுகளுக்கு ஏற்ப பயிருக்கு பரிந்துரை செய்யப்பட்ட அளவுகளின் படி தழை, மணி, சாம்பல் சத்து கொண்ட உரங்களை தனித்தனி உரங்களாக வாங்கி பயிருக்கு இடலாம். மேலும் பயிர்களுக்கான பொதுவான உர பரிந்துரையில் உரங்களை இடுவதை தவிர்த்து, நிலத்தின் தன்மைக்கு ஏற்ப அதிக அளவில் இயற்கை உரங்களான மண்புழு உரம், ஊட்டமேற்றிய தொழு உரம், நன்கு மக்கியபண்ணை கழிவுகள், பசுந்தாள்உரம் போன்றவற்றை பயன்படுத்தினால் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

திருந்திய நெல் சாகுபடியின் போது நீரை சிக்கனமாக பயன்படுத்தினால் தண்ணீரில் உரம் வீணாவது தவிர்க்கப்படும். மேலும் இலை வண்ண அட்டையை பயன்படுத்திதேவைக்கு ஏற்ப ரசாயன உரங்களை மேலுரமாக இடுவதால் அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் ரசாயன உரத்திற்காக தேவையின்றி பணம் செலவு செய்வது தவிர்க்கப்படுகிறது.எனவே விவசாயிகள் மண் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் ரசாயன உரங்களை இடுவதோடு, அதிகளவில் இயற்கை உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.இத்தகவலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தேவசகாயம் அறிக்கையில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us