Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதிய கடற்கரை சாலை அமைக்கநந்தா சரவணன் கோரிக்கை

புதிய கடற்கரை சாலை அமைக்கநந்தா சரவணன் கோரிக்கை

புதிய கடற்கரை சாலை அமைக்கநந்தா சரவணன் கோரிக்கை

புதிய கடற்கரை சாலை அமைக்கநந்தா சரவணன் கோரிக்கை

ADDED : செப் 04, 2011 01:41 AM


Google News
புதுச்சேரி:'சாராய ஆலையில் இருந்து சோலை நகர் வரை தடுப்பு சுவருடன் கூடிய சாலை அமைக்க வேண்டும்' என, நந்தா சரவணன் எம்.எல்.ஏ., கேட்டு கொண்டார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:நந்தா சரவணன்: முத்தியால்பேட்டை சோலை நகர்(வடக்கு) முதல் பழைய சாராய ஆலை வரை கடலோரமாக மீனவர்களுக்கு பாதுகாப்பாகவும், கடல் அரிப்பை தடுக்கும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், தடுப்பு சுவருடன் கூடிய நீண்ட சாலை அமைக்கும் திட்டப் பணிகள் எந்த நிலையில் உள்ளன...முதல்வர் ரங்கசாமி: கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.

நந்தா சரவணன்: இந்த பணி நடப்பு ஆண்டில் எடுத்துக் கொள்ளப்படுமா...முதல்வர் ரங்கசாமி: நடப்பு ஆண்டில் எடுத்துக் கொள்ளப்படும்.நந்தா சரவணன்: தடுப்பு சுவருடன் சாலை அமைத்தால், கடற்கரை பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும்.முதல்வர் ரங்கசாமி: பணியை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். கடற்கரை சாலைகளை மேம்படுத்த மத்திய அரசிடம் சிறப்பு நிதியும் கேட்டுள்ளோம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us