ADDED : செப் 19, 2011 12:58 AM
பரவை : பரவை பேரூராட்சியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பரவையில் தெருக்கள், ரோடுகளில் வீடு, கடைகளில் நீட்டிய மேற்கூரைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக, நிர்வாக அதிகாரிக்கு புகார்கள் சென்றன. பேரூராட்சி எல்லையில் காந்திஜி ரோடு முதல் கம்பன்தெரு, அரசு மேல்நிலைப்பள்ளி வரை, இத்தகைய ஆக்கிரமிப்புகள் இருந்தன. நிர்வாக அதிகாரி இப்ராஹிம்ஷா மற்றும் மண்டல துணைதாசில்தார் மணிமேகலை, ரவீந்திரன், நிலஅளவையாளர் ஜெயராமன், கிராம நிர்வாக அலுவலர்கள் சேகர், ராமானுஜம் மற்றும் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.