/உள்ளூர் செய்திகள்/தேனி/மனவளர்ச்சி குன்றிய பெண்ணுடன் ஓணம் கொண்டாடிய மாணவிகள்மனவளர்ச்சி குன்றிய பெண்ணுடன் ஓணம் கொண்டாடிய மாணவிகள்
மனவளர்ச்சி குன்றிய பெண்ணுடன் ஓணம் கொண்டாடிய மாணவிகள்
மனவளர்ச்சி குன்றிய பெண்ணுடன் ஓணம் கொண்டாடிய மாணவிகள்
மனவளர்ச்சி குன்றிய பெண்ணுடன் ஓணம் கொண்டாடிய மாணவிகள்
ADDED : செப் 06, 2011 10:44 PM
கூடலூர் : ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமுளி அமராவதி பள்ளி மாணவிகள், மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு உதவி செய்து, பண்டிகையை கொண்டாடினர்.
இப்பள்ளியில் 'ஸ்டூடன்ட் போலீஸ்' பிரிவில் 87 மாணவிகள் உள்ளனர். இவர்கள் ஓணம் பண்டிகையை மனவளர்ச்சி குன்றியவர்களுடன் கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி, அமராவதி லட்சம் வீடு காலனியில் வசிக்கும், மாலு (15) என்ற மனவளர்ச்சி குன்றிய பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். வறுமையில் வாடிய அப்பெண்ணின் தாயிடம் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், அரிசி வழங்கினர். மனவளர்ச்சி குன்றிய மாலுவை குளிக்க வைத்து, அலங்காரம் செய்து புத்தாடை கொடுத்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர். நாள் முழுவதும் அப்பெண்ணுடன் இருந்து ஓணத்தை கொண்டாடிய மாணவிகளை பொதுமக்கள் பாராட்டினர்.