/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சூலூர் ரேஷன் பணிகளில் :3 மாதத்தில் 3 அலுவலர்கள் மாற்றம் சுறுசுறுப்பு இல்லைசூலூர் ரேஷன் பணிகளில் :3 மாதத்தில் 3 அலுவலர்கள் மாற்றம் சுறுசுறுப்பு இல்லை
சூலூர் ரேஷன் பணிகளில் :3 மாதத்தில் 3 அலுவலர்கள் மாற்றம் சுறுசுறுப்பு இல்லை
சூலூர் ரேஷன் பணிகளில் :3 மாதத்தில் 3 அலுவலர்கள் மாற்றம் சுறுசுறுப்பு இல்லை
சூலூர் ரேஷன் பணிகளில் :3 மாதத்தில் 3 அலுவலர்கள் மாற்றம் சுறுசுறுப்பு இல்லை
ADDED : ஜூலை 13, 2011 10:20 PM
சூலூர் : சூலூர் தாலுகாவில், கடந்த மூன்று மாதங்களில் மூன்று வட்ட வழங்கல்
அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதனால்,ரேஷன் கார்டு வழங்குதல், கடைகளில்
ஆய்வு என அனைத்து பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. சூலூர் தாலுகாவில் 136
ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 99 முழுநேர ரேஷன் கடைகளும், 37 பகுதிநேர
கடைகளும் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
மேலும், தினமும் ஏராளமான மக்கள் புது ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து
வருகின்றனர். ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், சேர்த்தல், நீக்கல்
உள்ளிட்டவைகளுக்காக தாலுகா அலுவலகம் வருகின்றனர். தாலுகா அலுவலகத்தில்
நிரந்தரமான வட்ட வழங்கல் அலுவலர் இல்லாததால் பணிகள் அனைத்தும் முடங்கி
உள்ளன. கடந்த மே முதல் மூன்று மாதங்களில் மூன்று முறை டி.எஸ்.ஓ.,
மாற்றப்பட்டுள்ளனர். மே மாதத்தில் மனோகரன் என்பவர் பொறுப்பில் இருந்தார்.
சட்டசபை தேர்தல் முடிந்த பின், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார்.
அதற்குப்பின் ஜெயபால் என்பவர் பொறுப்பேற்றார்; அவரும் ஜூன் மாதக்கடைசியில்
பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் பொறுப்பேற்ற ரவி என்பவர் ஒரே
வாரத்தில் பதவி உயர்வு பெற்று சென்று விட்டார். இதுவரை நிரந்தர அலுவலர்
நியமிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ரேஷன் கடைகளில்
ஆய்வு செய்யும் பணியும் கடந்த சில மாதங்களில் முறையாக நடக்காதாதல்
முறைகேடுகள் அதிகரித்துள்ளன. சுல்தான்பேட்டை பகுதிகளில் பெரும்பாலான கடைகள்
முறையாக திறக்கப்படுவதில்லை; பொருட்கள் வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள்
புகார் தெரிவிக்கின்றனர். வடவள்ளி, வேலப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட
பகுதிகளில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை
உள்ளது. கிராம மக்கள் கூறுகையில், 'ரேஷன் கடைகளில் என்ன பொருட்கள்
வழங்கப்படுகிறது என்பது குறித்து அறிவிப்பு ஏதும் செய்வதில்லை. பகுதி நேர
ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான மக்கள்
தோட்டத்துசாளைகளில் வசிப்பதால் கடை திறப்பதே தெரிவதில்லை. நேரத்தில் சென்று
காத்திருந்தாலும் பொருட்கள் 'ஸ்டாக்' இல்லை என தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை' என்றனர். விரைவில்
நிரந்தரமான டி.எஸ். ஓ.,வை நியமித்து, ரேஷன் பொருட் கள் வழங்குவதில் உள்ள
குறைகளை களைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.


