/உள்ளூர் செய்திகள்/தேனி/மருத்துவ காப்பீட்டு திட்டம் டாக்டர்களிடம் கருத்து கேட்புமருத்துவ காப்பீட்டு திட்டம் டாக்டர்களிடம் கருத்து கேட்பு
மருத்துவ காப்பீட்டு திட்டம் டாக்டர்களிடம் கருத்து கேட்பு
மருத்துவ காப்பீட்டு திட்டம் டாக்டர்களிடம் கருத்து கேட்பு
மருத்துவ காப்பீட்டு திட்டம் டாக்டர்களிடம் கருத்து கேட்பு
ADDED : செப் 08, 2011 10:46 PM
கம்பம் : மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
கூடுதல் வசதிகளுடன் கூடிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தற்போது மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பாக பல்வேறு துறை நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள், ஆரம்பசுகாதார நிலையங்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள், தனியார் ஆஸ்பத்திரி உரிமையாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.