Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆசிரியர்களுக்கு ஆங்கிலப்பயிற்சி

ஆசிரியர்களுக்கு ஆங்கிலப்பயிற்சி

ஆசிரியர்களுக்கு ஆங்கிலப்பயிற்சி

ஆசிரியர்களுக்கு ஆங்கிலப்பயிற்சி

ADDED : ஜூலை 24, 2011 02:28 AM


Google News

உடுமலை : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மடத்துக்குளம் ஒன்றிய ஆசிரியர்களுக்கு, வட்டார வள மையத்தில், ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் பிரிட்டிஷ் இங்கிலீஷ் கவுன்சில் சார்பில் நடந்த பயிற்சியில், மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 27 ஆசிரியர்கள் பங்கேற்றனர்; நான்கு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆங்கிலம் வாசித்தல், உரையாடல், எழுதுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் பயிற்றுனர்கள் சுந்தர்ராஜ், செல்வ சரோஜினி வழங்கினர். மேற்பார்வையாளர் ஜெயலட்சுமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சுமதி, பயிற்சியின் போது ஆய்வில் ஈடுபட்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us