போபால் விஷ வாயு சம்பவம் டிசம்பருக்குள் நிவாரணம்:
போபால் விஷ வாயு சம்பவம் டிசம்பருக்குள் நிவாரணம்:
போபால் விஷ வாயு சம்பவம் டிசம்பருக்குள் நிவாரணம்:
ADDED : ஆக 11, 2011 11:21 PM
புதுடில்லி: ''போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, நிவாரணத் தொகை வழங்குவது டிசம்பர் மாதத்திற்குள் முடிந்து விடும்,'' என, மத்திய அரசு தெரிவித்தது.
லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, பதிலளித்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா மேலும் கூறுகையில், ''போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, 740 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்க, மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதில், 519 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை டிசம்பர் இறுதிக்குள் வழங்கப்பட்டு விடும்,'' என்றார்.