/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கிராம பெண்கள் நிலை விபரம் சட்டப்பணிகள் குழு சேகரிப்புகிராம பெண்கள் நிலை விபரம் சட்டப்பணிகள் குழு சேகரிப்பு
கிராம பெண்கள் நிலை விபரம் சட்டப்பணிகள் குழு சேகரிப்பு
கிராம பெண்கள் நிலை விபரம் சட்டப்பணிகள் குழு சேகரிப்பு
கிராம பெண்கள் நிலை விபரம் சட்டப்பணிகள் குழு சேகரிப்பு
ADDED : ஆக 02, 2011 11:30 PM
சிவகாசி : கிராமங்களில் பெண்குழந்தைகள் நிலை பற்றிய விபரங்களை சட்டப்பணிகள் குழு சேகரித்து வருகிறது.
தேசிய, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இம் மாதத்தை 'பெண்குழந்தை பாதுகாப்பு' மாதமாக கொண்டாட உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து சிவகாசி சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி சுமதி ஆலோசனை படி, சிவகாசி பகுதி கிராமங்களில் உள்ள பெண்களின் உண்மை நிலை அறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டி.மானகசேரி, வடபட்டி, ஈஞ்சாறு, நடுவபட்டி, அருணாசலபுரம், மண்ணுக்குமீண்டான்பட்டி ஆகிய கிராமங்களில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் விபரங்களை சேகரிக்கும் பணியில் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பேராசிரியை அருண்மொழி தலைமையில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் கிராமங்களுக்கு சென்று வீடுகளில் உள்ள பெண்கள், படிப்பு, இடைநின்றவர்கள், வேலைக்கு செல்வபர்கள் போன்ற விபரங்கள் சேகரிக்கின்றனர். இதன் புள்ளி விபரங்களின் அடிப்படையில் கிராம பெண்கள் வளர்ச்சிக்கான கருத்தரங்கு, மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.