ADDED : அக் 02, 2011 01:09 AM
திருநெல்வேலி :நெல்லையில், நேற்று மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக, தொடர்ந்து வெயில் வாட்டி வருகிறது.
பகலில் சித்திரை மாத அக்னி நட்சத்திரத்து வெயில் போல வாட்டி வதைத்தது. வெயிலுக்கு மாற்றாக, நேற்று மாலையில், மாவட்டத்தின் ஒன்றிரண்டு இடங்களில், பலத்த மழை பெய்தது. நெல்லை பழையபேட்டை, அபிசேகப்பட்டி பகுதியில், பலத்த மழை பெய்தது.


