முடங்கிய வருமுன் காப்போம் திட்டம் மண்ணில் புதைந்து வரும் வாகனங்கள்
முடங்கிய வருமுன் காப்போம் திட்டம் மண்ணில் புதைந்து வரும் வாகனங்கள்
முடங்கிய வருமுன் காப்போம் திட்டம் மண்ணில் புதைந்து வரும் வாகனங்கள்
ADDED : ஆக 21, 2011 02:07 AM
ராமநாதபுரம் : தமிழகத்தில் வருமுன்காப்போம் திட்டம் முடங்கி உள்ளதால் அதற்காக வழங்கப்பட்ட வாகனங்கள் மண்ணில் புதைந்து வருகின்றன.
கிராம மக்களும் பயன்படுத்தும் வண்ணம் வருமுன் காப்போம் திட்டம் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி., சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் சுகாதாரத்துறையினர் கிராமப்பகுதிகளுக்கே நேரடியாக சென்று சிகிச்சை அளித்தனர். மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. இத்திட்டம் மக்களிடையே மிகந்து வரவேற்பை பெற்றது. கடந்த தி.மு.க., ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கிராம மக்கள், நகர்புற மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் வருமுன்காப்போம் முகாம் நடத்தப்பட துவங்கவில்லை. இதற்கென பயன்படுத்தப்பட்டு வந்த வாகனங்கள் மண்ணில் புதையும் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு மேற்கொள்ளப்படாமல், துரு பிடித்துள்ளன. இத்திட்டம் மீண்டும் செயல்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.