/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சங்கரன்கோவில் அருகே ரயில் கவிழ்ப்பு முயற்சி வழக்கில் மேலும் இருவர் கைதுசங்கரன்கோவில் அருகே ரயில் கவிழ்ப்பு முயற்சி வழக்கில் மேலும் இருவர் கைது
சங்கரன்கோவில் அருகே ரயில் கவிழ்ப்பு முயற்சி வழக்கில் மேலும் இருவர் கைது
சங்கரன்கோவில் அருகே ரயில் கவிழ்ப்பு முயற்சி வழக்கில் மேலும் இருவர் கைது
சங்கரன்கோவில் அருகே ரயில் கவிழ்ப்பு முயற்சி வழக்கில் மேலும் இருவர் கைது
ADDED : செப் 22, 2011 12:40 AM
சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் அருகே ரயிலை கவிழ்க்க சதி செய்ததாக இரண்டு
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உட்பட 11
பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதற்கு
எதிர்ப்பு தெரிவித்து சங்கரன்கோவில் அருகே சோலைசேரி தேவி ஆறு பாலத்தில்
தண்டவாளத்தின் மீது கான்கிரீட் சிலிப்பர் வைத்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை
கவிழ்க்க சதி நடந்தது. இதுதொடர்பாக ரயில்வே போலீசார் 5 பேரை கைது
செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் அருகே இலவன்குளம் ரயில்வே
தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து பொதிகை எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரை
பாசஞ்சர் ரயிலை கவிழ்க்க சிலர் சதி செய்தனர். தண்டவாளத்தில் ரோந்து சென்ற
போலீசார் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து ரயில்
கவிழ்ப்பு முயற்சியை தடுத்தனர். இதுதொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார்
இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு வழக்கு தொடர்பாக
புளியம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன்
முத்துப்பாண்டி(31), இலவன்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ரவி, மிளகு,
பகவதி மகன் திருப்பதி, குருசாமி மகன் திருப்பதி, முனியாண்டி என்ற டேனியல்
மகன் ஆனந்தராஜ், புளியம்பட்டி சங்கரலிங்கம், வெள்ளத்துரை மகன் காளிராஜ்
ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முத்துப்பாண்டி,
குருசாமி மகன் திருப்பதி ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசாரால் தேடப்பட்டு வரும் ஆனந்தராஜ் களப்பாகுளம் பஞ்சாயத்து இளைஞர்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். மற்றொரு வழக்கில்
இலவன்குளத்தைச் சேர்ந்த முனியாண்டி என்ற டேனியல் மகன் சாம்ராஜ், பாஸ்கர்
மகன் சீனிவாசன் என்ற குட்டையன், சுப்பையாபாண்டியன் மகன் சின்னத்துரை,
பாஸ்கர் மகன் செல்வக்குமார், கனகராஜ் மகன் தர்மராஜ், சுப்பிரமணியன் மகன்
ரவி, வடக்கு அழகுநாச்சியார்புரம் காளிராஜ் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் தாலுகா இன்ஸ்பெக்டர் சுலைமான், சிறப்பு
சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி, ஏட்டுகள் ஜெகன், பவுல், சூசை, நவமணி ஆகியோர்
குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.