Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/73 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பா.ம.க., கோரிக்கை

73 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பா.ம.க., கோரிக்கை

73 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பா.ம.க., கோரிக்கை

73 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பா.ம.க., கோரிக்கை

ADDED : செப் 13, 2011 12:59 AM


Google News

புதுச்சேரி : புதுச்சேரியில் கிடப்பில் போடப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான 73 சதவீத இடஒதுக்கீட்டை முதல்வர் அமல்படுத்த வேண்டும்.

இதுகுறித்து பா.ம.க., செய்தி தொடர்பாளர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்த 94ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 30 சதவீதமும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 20 சதவீதமும், தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவருக்கு 3 சதவீதம் என 73 சதவீதம் என்ற தீர்மானத்தை கொண்டு வந்த அப்போதைய முதல்வர் வைத்திலிங்கம் அதை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



தமிழகத்தில் 1980ம் ஆண்டு முதல் 69 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்பட்டதில் பல்வேறு நெருக்கடிகள், தடைகள், நீதிமன்றத்தில் வழக்குகள் ஏற்பட்டபோதும், இன்று வரை தமிழக அரசு 69 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி வருகிறது.இதேப் போன்று பல்வேறு இடங்களில் இடஒதுக்கீடு பிரச்னையில் தமிழகத்தை ஒப்பிடும் போது புதுச்சேரியில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆகவே, புதுச்சேரி மக்கள் நலனை கருத்தில் கொண்டு, 73 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அரசு ஒப்புதலுடன் புதுச்சேரியில் நிரந்தரமாக 73 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us