/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சீட்டு பணத்தகராறு 6 பேர் அதிரடி கைதுசீட்டு பணத்தகராறு 6 பேர் அதிரடி கைது
சீட்டு பணத்தகராறு 6 பேர் அதிரடி கைது
சீட்டு பணத்தகராறு 6 பேர் அதிரடி கைது
சீட்டு பணத்தகராறு 6 பேர் அதிரடி கைது
ADDED : ஆக 07, 2011 01:41 AM
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஅள்ளியை சேர்ந்தவர் சின்னவன்.
இவருக்கும் அதே ஊரை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் இடையே கோவில் சீட்டு பணம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சின்னவன், மணி என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, முருகேசன், முனிராஜ், கிருஷ்ணன், ராணி ஆகியோர் சின்னவனை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இது தொடர்பாக சின்னவன் கொடுத்த புகாரின்பேரில் முருகேசன் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். இதே போல் முருகேசன் தன்னை சின்னவன் மற்றும் சிலர் வீடு புகுந்து தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் தர்மன், அழகேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.