Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அமைச்சர் விழாவில் உதவி பெற காத்திருந்த பெண் மயக்கம்

அமைச்சர் விழாவில் உதவி பெற காத்திருந்த பெண் மயக்கம்

அமைச்சர் விழாவில் உதவி பெற காத்திருந்த பெண் மயக்கம்

அமைச்சர் விழாவில் உதவி பெற காத்திருந்த பெண் மயக்கம்

ADDED : ஆக 21, 2011 11:52 PM


Google News

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன் தினம் நடந்தது.

மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் அமைச்சர் ஆர்.பி.,உதய குமார் நலதிட்ட உதவிகள் வழங்குவதாக இருந்தது. இதற்காக அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் மதியம் 12 மணிக்கே அழைத்துவரப்பட்டனர். அமைச்சர் இரவு 7 மணிக்குத்தான் வந்தார். இதில் விதவை உதவி தொகை பெற வந்த கல்லுமடத்தை சேர்ந்த கவிதா,32, என்ற பெண்ணுக்கு கூட்ட நெரிசலில் வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார். உடன் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். கரிசல்குளத்தை சேர்ந்த சித்திரை செல்வி கூறுகையில், ''எங்களை மதியம் 12 மணிக்கே அழைத்து வந்து உட்கார வைத்து விட்டனர். சாப்பிடக்கூட அனுமதிக்கவில்லை. எனக்கு மயக்கமாக வந்ததால் நான் கூட்டத்தில் இருந்து வெளியில் வந்து விட்டேன்'', என்றார். கலெக்டர் பாலாஜி தலைமையில் அமைச்சர் 28 லட்சத்து 54 ஆயிரத்து 763 ரூபாய் நல திட்ட உதவிகளை வழங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அரசு அலுவலர்கள் பஙங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us