ADDED : ஜூலை 28, 2011 10:53 PM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த மேலூர் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மனைவி அமிர்தம்,62.
இவர் கடந்த 26ம் தேதி மதியம் கள்ளக்குறிச்சியில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பையில் வைத்து கொண்டு பஸ்சில் வீட்டிற்கு புறப்பட்டார். பஸ்சிலிலிருந்து இறங்கி பார்த்த போது பையில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அமிர்தம் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.