Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரயில்வே அதிகாரிகள் ஓய்வறை: விழுப்புரத்தில் திறப்பு விழா

ரயில்வே அதிகாரிகள் ஓய்வறை: விழுப்புரத்தில் திறப்பு விழா

ரயில்வே அதிகாரிகள் ஓய்வறை: விழுப்புரத்தில் திறப்பு விழா

ரயில்வே அதிகாரிகள் ஓய்வறை: விழுப்புரத்தில் திறப்பு விழா

ADDED : செப் 16, 2011 03:19 AM


Google News
விழுப்புரம்:விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனி பகுதியில் மின்மயமாக்கல் துறை அதிகாரிகள் ஓய்வறையை கோட்ட மேலாளர் வைத்திலிங்கம் திறந்து வைத்தார்.

விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனி பகுதியில் அதிகாரிகள் தங்கும் ஓய்வு விடுதி உள்ளது. இங்கு மேல் தளத்தில் ரயில்வே மின் மயமாக்கல் துறை அதிகாரிகள் தங்குவதற்காக 30 லட்சம் ரூபாய் மதிப்பில் இரு அறைகள், மீட்டிங் ஹால் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. கோட்ட மேலா ளர் வைத்திலிங்கம் கட்டடத்தை திறந்து வைத்து, மரக் கன்றுகள் நட்டார். ரயில்வே உள் விளையாட்டரங்கை சீரமைப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரருடன் ஆலோசனை நடத்தினார். வடக்கு ரயில்வே குடியிருப்புப் பகுதியில் நடக்கும் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார். ரயில் நிலையத்தில் இருந்த பழைய தண்டவாளங்களைப் பார்த்து விரைவில் அகற்ற கூறினார்.மின்மயமாக்கல் முதன்மை திட்ட மேலா ளர் உதயகுமார், உதவி முதன்மை எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் ராமகிருஷ்ணன், திருச்சி கோட்ட எலக்ட்ரிக்கல் பொறியாளர் தியாகராஜன், முதன்மை கோட்ட பாதுகாப்பு அதிகாரி சுப்பையன், கோட்ட பொறியாளர் ராஜராஜன், சீனியர் கமர்ஷியல் மேலா ளர் பிரசாத், முதன்மை மருத்துவ அதிகாரி சவுந்தர்ராஜன், நிலைய கண்காணிப்பாளர் லகரா உட்பட பலர் உடனிருந்தனர்.கோட்ட மேலாளர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:

திருச்சிக்கு இணையாக விழுப்புரம் ஜங்ஷன் முக்கியமான பகுதியாக மாறி வருகிறது. மின் மயமாக்கும் பணிகளும் அதிகளவில் நடக்கிறது. அதிகாரிகள் வந்து செல்வதால் 'ரெஸ்ட் ரூம்' தேவை என கோரிக்கை விடுத்தனர்.

இதற்காக 30 லட்சம் ரூபாய் மதிப்பில் திறக்கப்பட்டுள்ளது.விழுப்புரத்தில் புதிய ரயில் நிலைய கட்டடம் விரைவில் திறக்கப்படும். புதுச்சேரி- திருப்பதி பாசஞ்சர் ரயிலை வேலூர் மார்க்கத்தில் இயக்க பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம். நூற்றாண்டு பழமை வாய்ந்த டென்னிஸ் உள்விளையாட்டரங்கை சீரமைக்க கூறியுள்ளேன். ரயில் விபத்துகளை கட்டுப்படுத்த 'லோகோ பைலட்களுக்கு' சிறப்புப் பாதுகாப்பு வகுப்புகள் எடுத்து அறிவுரைகள் வழங் கியுள்ளோம். திரும்பி செல்லும் போது லோகோ பைலட்டுடன் சென்று பாது காப்பு குறித்து ஆலோசனை வழங்க உள்ளேன்.இவ்வாறு கோட்ட மேலாளர் வைத்திலிங்கம் கூறினார்.பின்னர் காலை 10.40 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி செல்லும் போது விழுப்புரத் தில் இருந்து விருத்தாசலம் வரை ரயில் இன்ஜினில் கோட்ட மேலாளர் பயணம் செய்து லோகோ பைலட்களுக்கு பாதுகாப்பாக இயக்குவது குறித்து ஆலோசனை வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us