தேவையில்லாதது பெட்ரோல் விலை உயர்வு
தேவையில்லாதது பெட்ரோல் விலை உயர்வு
தேவையில்லாதது பெட்ரோல் விலை உயர்வு
ADDED : செப் 17, 2011 09:47 PM
காரைக்குடி : ''கச்சா எண்ணெய் 88 டாலராக குறைந்துள்ளது.
ஆனால், சர்வதேச சந்தையை காரணம் காட்டி பெட்ரோல் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது,'' என பா.ஜ., மாநில துணை தலைவர் எச். ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது :ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2 வது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.இதற்கு காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, ஊழல். சில மாதங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 100 டாலர் வரை விற்பனையானது. அது, தற்போது 88 டாலராக குறைந்துள்ளது. ஆனால், சர்வதேச சந்தையை காரணம் காட்டி பெட்ரோல் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.மீண்டும், மீண்டும் குஜராத்தை பற்றியே காங்., அரசு பேசி வருகிறது.உள்ளாட்சி தேர்தலை அக்., 23க்குள் முடிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிட வேண்டும். மாவட்டந்தோறும் பா.ஜ., சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. செப்., 20ம் தேதிக்கு பிறகு தேர்தல் பொறுப்பாளர்கள் குழு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவர், என்றார்.