/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பஸ் ஸ்டாண்டில் தவித்த குழந்தை மீட்புபஸ் ஸ்டாண்டில் தவித்த குழந்தை மீட்பு
பஸ் ஸ்டாண்டில் தவித்த குழந்தை மீட்பு
பஸ் ஸ்டாண்டில் தவித்த குழந்தை மீட்பு
பஸ் ஸ்டாண்டில் தவித்த குழந்தை மீட்பு
ADDED : ஆக 19, 2011 11:28 PM
ஓசூர்: சூளகிரியில் பஸ் ஸ்டாண்ட்டில் தவித்த குழந்தையை ஆட்டோ டிரைவர்கள், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சூளகிரி பஸ்ஸ்டாண்ட்டில் நேற்று காலை, மூன்று வயது ஆண் குழந்தை அழுது
கொண்டிருந்தது. அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், குழந்தையை மீட்டு
விசாரித்தனர். பெற்றோரை காணாததால், குழந்தையை சூளகிரி போலீஸாரிடம் ஆட்டோ
டிரைவர்கள் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில்,
சூளகிரி மலை அடிவாரத்தை சேர்ந்த கோவிந்தசாமியின் குழந்தை என தெரிந்தது.
குழந்தையை அவரது தாய் பஸ்ஸ்டாண்ட்டிற்கு அழைத்து வந்த போது, தவற விட்டது
தெரிந்தது. போலீஸாரை பெற்றோரை எச்சரித்து குழந்தையை ஒப்படைத்தனர்.


