/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்ட முதல் பெண் டி.ஆர்.ஓ., பொறுப்பேற்புதூத்துக்குடி மாவட்ட முதல் பெண் டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாவட்ட முதல் பெண் டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாவட்ட முதல் பெண் டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாவட்ட முதல் பெண் டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 12, 2011 12:25 AM
தூத்துக்குடி மாவட்ட முதல் பெண் புதிய டி.ஆர்.ஓவாக அமிர்தஜோதி பொறுப்பேற்றார்.
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரியாக (டி.ஆர்.ஓ) பணியாற்றி வந்த துரை.
ரவிச்சந்திரன் மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி புதிய டி.ஆர்.ஓவாக சென்னை மாநில சுகாதார காப்பீடு மையத்தில் டி.ஆர்.ஓவாக பணியாற்றிய அமிர்தஜோதி நியமிக்கப்பட்டார்.
பெண் டி.ஆர்.ஓ அமிர்தஜோதி மேட்டூர் ஆர்.டி.ஓவாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பதவி உயர்வு பெற்று சென்னை மாநகராட்சி, கோவை டாஸ்மாக் மண்டல மேலாளர் ஆகிய பதவிகளிலும் பணியாற்றியவர். இம் மாவட்டத்தில் 15 டி.ஆர்.ஓக்கள் பணியாற்றியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தில் கலெக்டருக்கு அடுத்த நிலையில் மிகப் பெரிய பொறுப்பு மிக்க பதவியான டி.ஆர்.ஓ பணியிடத்தில் இதுவரை பெண் அதிகாரியாரும் தூத்துக்குடியில் பணியாற்றியதில்லை.
முதல் பெண் டி.ஆர்.ஓவாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு அமிர்தஜோதி நியமிக்கப்பட்டு நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். மரியாதை நிமித்தமாக கலெக்டர் செல்வராஜை சந்தித்தார். நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலந்து கொண்டார்.