/உள்ளூர் செய்திகள்/திருச்சி/உட்கட்சிப் பூசலால் காருக்கு "தீ' வைப்பா?உட்கட்சிப் பூசலால் காருக்கு "தீ' வைப்பா?
உட்கட்சிப் பூசலால் காருக்கு "தீ' வைப்பா?
உட்கட்சிப் பூசலால் காருக்கு "தீ' வைப்பா?
உட்கட்சிப் பூசலால் காருக்கு "தீ' வைப்பா?
ADDED : செப் 26, 2011 11:52 PM
மணப்பாறை: மணப்பாறை இந்திரா நகரில் வசித்து வருபவர் சின்னச்சாமி(43).
அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர் மருங்காபுரி தொகுதியில் கடந்த முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தார். தற்போது உள்ளாட்சி தேர்தலில் இவரது மனைவி மாலதிக்கு திருச்சி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 22வது வார்டில் போட்டியிட கட்சியில் 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சின்னச்சாமி நேற்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக நேற்று முன்தினம் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று கட்சியினரை சந்தித்துவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் முன்புறம் தனது டாடா சுமோ காரை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். நேற்று அதிகாலை மூன்று மணிக்கு வெடிச்சத்தம் கேட்டுள்ளது. தூங்கிகொண்டிருந்த சின்னச்சாமி மனைவி மாலதி எழுந்து வீட்டினுள் பார்த்துள்ளார். அப்போது, கார் ஹாரன் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.
அங்கே காரின் இன்ஜின் பகுதி தீப்பிடித்து எரிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் சின்னச்சாமியும், இரவு ரோந்து வந்த போலீஸாரும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் காரின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. சின்னச்சாமி, மணப்பாறை போலீஸில் புகார் செய்தார். எஸ்.ஐ., அரங்கநாதன் விசாரிக்கிறார். நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவிருந்த நிலையில் சின்னச்சாமி கார் மர்மமான முறையில் எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உட்கட்சி பூசலால் காருக்கு தீ வைக்கப்பட்டதா? அல்லது வேறு யாரேனும் விஷமிகளால் 'தீ' வைக்கப்பட்டதா? என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.