/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மலை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் கவலை :முக்கிய பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லைமலை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் கவலை :முக்கிய பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லை
மலை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் கவலை :முக்கிய பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லை
மலை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் கவலை :முக்கிய பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லை
மலை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் கவலை :முக்கிய பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லை
ADDED : ஆக 14, 2011 10:15 PM
மஞ்சூர் : நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் முக்கிய பாடபிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களில் கல்வி கேள்வி குறியாகியுள்ளது.
நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர் கல்வி மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, 80க்கு மேற்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. நடப்பாண்டில் பள்ளி துவங்கி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் சமச்சீர் கல்வி பிரச்னையை அடுத்து பள்ளி மாணவர்கள் பொது அறிவு பாடங்களை மட்டுமே படித்து வந்தனர். இந்நிலையில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து மாநில அரசு சார்பில் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் நேற்று முன்தினம் முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரையில் பள்ளிகளில் கணிதம், அறிவியல், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கிய பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளது. ஒரு சில பள்ளிகளில் பி.டி.ஏ., உதவியுடன் ஆசிரியர்கள் நியமித்து பாடங்கள் கற்பிக் கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் பணியிடம் காலியாக உள்ளது. காலாண்டு தேர்வு நெருங்கி வரும் வேளையில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவ, மாணவியர் பள்ளிக்கு சென்றாலும், காலை, மாலை நேரங்களில் தனியார் கல்வி நிலையங்கள் மூலம் தான் அதிக கட்டணம் கொடுத்து படித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரையில் 5ல் ஒரு பகுதி பணியிடம் நிரப்ப படாமல். முக்கிய பாடங்களில் ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை யாசிரியரிடம் சென்று காரணம் கேட்டு வருகின்றனர். 'மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,'என சமீபத்தில் மஞ்சூர் வந்த உணவு துறை அமைச்சர் புத்திசந்திரனிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. 'விரைவில் முக்கிய பாடப்பிரிவுகளில் ஆசிரியர்களை பணி அமர்த்த வேண்டும். தவறும் பட்சத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவதுடன், மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும்,' என பெற்றோர்கள் அச்சம் தெரி விக்கின்றனர். இதற்கான மனு மாநில முதல்வரின் தனிப்பிரிவுக்கும் அனுப்பப்பட்டுள் ளது.