ஜம்மு - காஷ்மீர் விவகாரம்: சீனா - பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!
ஜம்மு - காஷ்மீர் விவகாரம்: சீனா - பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!
ஜம்மு - காஷ்மீர் விவகாரம்: சீனா - பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!
ADDED : ஜூன் 14, 2024 06:12 AM

புதுடில்லி: சீனா - பாகிஸ்தானின் சமீபத்திய கூட்டறிக்கையில் ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும் என குறிப்பிடப்பட்டதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்ட சீனா - பாக்., கூட்டறிக்கையில், ஜம்மு - காஷ்மீர், லடாக் பற்றி தேவையற்ற குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்த பிரச்னையில் எங்கள் நிலைப்பாடு நிலையானது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகள்.
வேறு எந்த நாட்டிற்கும் இது குறித்து கருத்து தெரிவிக்க உரிமையில்லை. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இடையூறு விளைவித்து, அங்கு பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் மற்ற நாடுகளின் எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம்; நிராகரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.