Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ராணுவ வீரர்கள் ஓட்டப்போட்டி: பெங்களூரூ அணி வெற்றி

ராணுவ வீரர்கள் ஓட்டப்போட்டி: பெங்களூரூ அணி வெற்றி

ராணுவ வீரர்கள் ஓட்டப்போட்டி: பெங்களூரூ அணி வெற்றி

ராணுவ வீரர்கள் ஓட்டப்போட்டி: பெங்களூரூ அணி வெற்றி

ADDED : செப் 16, 2011 07:15 PM


Google News
குன்னூர் :வெலிங்டன் ராணுவ முகாமில் ராணுவ அணிகளுக்கு இடையே நடந்த தொடர் ஓட்டப் போட்டியில் பெங்களூரு எம்.இ.ஜி., அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, காஷ்மீர் பகுதியில் உள்ள ராணுவ அணிகளுக்கு இடையேயான 12 கி.மீ., தூர தொடர் ஓட்டப் போட்டி குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி., விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

ஐதராபாத் ஏரியா மையம், பெங்களூரு எம்.இ.ஜி மையம், வெலிங்டன் எம்.ஆர்.சி., அணி, கொச்சி, திருவனந்தபுரம் உட்பட 12 ராணுவ அணிகள் பங்கேற்றன. இதில், பெங்களூரு எம்.இ.ஜி., மையம் சாம்பியன் பட்டம் பெற்றது. வெலிங்டன் எம்.ஆர்.சி., அணி, ஐதராபாத் ஆர்டி மைய அணிகள், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை தக்க வைத்தன. நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை வெலிங்டன் எம்.ஆர்.சி., அணியை சேர்ந்த அவில்தார். ஈரப்பா டாக்கி, 39.27 நிமிடத்தில் கடந்து முதலிடம் பெற்றார். பெங்களுரூ எம்.இ.ஜி., மையத்தை சேர்ந்த நாயக். சுனில் பதான், அவில்தார் போரப்பா இரண்டு, மூன்றாம் இடங்களை தக்க வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு எம்.ஆர்.சி., கமாண்டன்ட். பிரிகேடியார் ஜாதவ் பரிசு வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us